ரம்ஜானில் மோத தயாராகும் விக்ரம், தனுஷ் படங்கள்..!


ரம்ஜானில் மோத தயாராகும் விக்ரம், தனுஷ் படங்கள்..!

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ என்ற படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் விக்ரம். இவருடன் நயன்தாரா, நித்யா மேனன், நாசர், தம்பி ராமையா, யூகிசேது உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

கடந்த சில நாட்களாக மலேசியாவில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்களை மே மாதத்தில் வெளியிட இருக்கிறார்களாம். படத்தினை ரம்ஜான் விருந்தாக ஜூலை 8ஆம் தேதி வெளியிடவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இதே நாளில்தான் தனுஷ், த்ரிஷா நடித்துவரும் ‘கொடி’ படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.