தனுஷ் உடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்…!


தனுஷ் உடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்…!

துரை செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடித்து வந்தார் தனுஷ். இதில் முதன்முறையாக அண்ணன் – தம்பி என இருவேடங்களில் தனுஷ் நடித்து வருவது நாம் அறிந்ததே.

இதில் தனுஷுடன் த்ரிஷா, எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பிரேமம் நாயகி அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோரும் நடித்து வந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வுண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரித்து வருகிறார்.

பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இதுபோல் உதயநிதி, ஹன்சிகா, விவேக், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து வந்த ‘மனிதன்’ படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

பொள்ளாச்சி மற்றும் காரைக்குடியில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பை சாலக்குடியில் நிறைவு செய்துள்ளனர்.

‘என்றென்றும் புன்னகை’ படத்தை தொடர்ந்து அஹ்மத் இப்படத்தை இயக்கியுள்ளார். இசை சந்தோஷ் நாராயணன்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் ரீமேக்தான் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.