விஜய்க்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் தனுஷ்!


விஜய்க்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் தனுஷ்!

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படம் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. தனுஷ் நடிகராகவும் தயாரிப்பாளகவும் ஜெயித்து வருகிறார். ஒரு பக்கம் தயாரிப்பு பணியில் பிஸியாக இருந்தாலும், படங்களில் அசராமல் நடித்து வருகிறார்.

தற்போது, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தில் காஜல் அகர்வாலுடன் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபனுடன் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் ஏற்றிருப்பது போலீஸ் அதிகாரி வேடமாம். இதுகுறித்து அவர் கூறியதாவது… “தனுஷுடன் இணைந்து நடிப்பது ஓர் இனிய அனுபவம். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.  அவரும் நிறைய சொல்லிக் கொடுத்தார்” என்றார்.

மேலும், ரோபோ ஷங்கர் மற்றும் காளி வெங்கட் ஆகியோரும் நடித்து வரும் இப்படத்தின்  பாடல்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.