பறபறக்கும் ‘கொடி’… பரபரப்பில் தனுஷ்…!


பறபறக்கும் ‘கொடி’… பரபரப்பில் தனுஷ்…!

கோலிவுட், பாலிவுட் கலக்கி வந்த தனுஷ் விரைவில் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது துரை செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் தனுஷ் உடன் த்ரிஷா, ஷாம்லி, சதீஷ், விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதன் மொத்தப் படப்பிடிப்பையும் 60 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர். எனவே படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மேலும் பல படங்கள் கைவசம் உள்ளதால், இதனை முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடிக்கவிருக்கிறாராம் தனுஷ்.