‘ஷமிதாப்’ படம் தோல்விதான்; அமிதாப் மீது தனுஷ் டென்ஷன்!


‘ஷமிதாப்’ படம் தோல்விதான்; அமிதாப் மீது தனுஷ் டென்ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பால்கி இயக்க, அமிதாப், தனுஷ், அக்ஷரா உள்ளிட்டோர் நடிக்க ஒரு சில மாதங்களுக்கு முன்பு ‘ஷமிதாப்’ படம் வெளியானது. இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக பால்கி நடத்தியிருந்தார். இவ்விழாவில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி போன்ற பிரபலங்கள் பங்கேற்றனர். இது இந்திப் படம் என்றாலும் நிறைய தமிழ் கலைஞர்கள் பங்காற்றி இருந்தனர். தமிழகத்தில் சிறிய அளவில் வரவேற்பு இருந்தாலும், வடநாட்டு மீடியாக்கள் படத்தை அமிதாப் ஒருத்தருக்காக மட்டுமே பார்க்கலாம் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சனே ‘ஷமிதாப்’ படம், வசூல் ரீதியாக தோல்விப்படம் தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. “அப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தபோதிலும், ‘ஷமிதாப்’ படத்தில் பணி புரிந்தது தனக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்தது. என்னால் மறக்க முடியாத படம்” என்று கூறியதாக தகவல் தெரிவிக்கிறது.

ஏற்கெனவே ‘அனேகன்’ படம் சரியாக வசூல் செய்யவில்லை என்றபோதிலும், படம் செம கலெக்ஷன் என்ற தவறான தகவலை தனுஷ் பரப்பியிருந்தார் என்று கூறி வரும் நிலையில்… ஷமிதாப் பற்றி அமிதாப் இப்படி கூறியது நடிகர் தனுஷ் அவர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் டென்ஷனை உண்டாக்கியுள்ளதாம்.