விஜய் மனைவியை வாழ்த்திய தனுஷ்!


விஜய் மனைவியை வாழ்த்திய தனுஷ்!

ஒரு நடிகராக பிஸியாக இருந்தாலும் ஒரு தயாரிப்பாளராக படுபிஸியாக இருக்கிறார் தனுஷ். என்னதான் இவர் பிஸியாக இருந்தாலும் தன் படம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார். தான் நடிக்கும் படமாக இருந்தாலும் தன் தயாரிப்பில் உருவாகும் படமாக இருந்தாலும் படத்தின் கலைஞர்கள் முதல் வெளியீட்டு தேதி வரை தெரிவித்து வருகிறார்.

இதுமட்டுமில்லாமல் மாதம் ஒரு முறையாவது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடி வருகிறார். எனவே ட்விட்டரில் இவரை பாலோ செய்யும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவருடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த நடிகையும் இயக்குனர் விஜய்யின் மனைவியுமான அமலா பால் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனுஷ்.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தங்க மகன்’ படத்தின் பாடல்கள் நவம்பர் மாதமும், படம் டிசம்பர் 18ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.