தனுஷின் ‘கொடி’ ஸ்டார்ட்…!


தனுஷின் ‘கொடி’ ஸ்டார்ட்…!

தனுஷ்…  கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை நிலவரத்தை கவனித்து நிவாரணப் பொருட்களால் உதவியதோடு மருத்துவ முகாம்களையும் நடத்தினார்.

தற்போது மீண்டும் தன் படவேலைகளில் பிஸியாகவுள்ளார். நேற்று முன்தினம் இவரின் ‘தங்கமகன்’ ட்ரைலர் வெளியாகி 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள ‘கொடி’ படத்தின் பூஜை நேற்று மிக எளிமையாக நடைபெற்றது.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா மற்றும் ஷாம்லி நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.