தனுஷ் தர லோக்கல்தான்; ஆனால். விஜய் உலக மகா லோக்கல்!


தனுஷ் தர லோக்கல்தான்; ஆனால். விஜய் உலக மகா லோக்கல்!

தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தில் தர லோக்கல் பாடல் இடம் பெற்று இருந்தது. அனிருத் இசையில் உருவான இது மாபெரும் ஹிட்டடித்தது. தற்போது அனிருத் இசையை மிஞ்சும் வகையில் விஜய் படத்தில் ஒரு பாடல் உருவாகி வருகிறது.

இந்நிலையில் ‘தலைவா’ படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் புதிய படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வந்த ‘வாங்கண்ணா… வணக்கங்கண்ணா…’ பாடல் இன்றும் பட்டிதொட்டி ஒலித்து கொண்டிருக்கிறது. எனவே, அட்லி இயக்கும் இப்படத்திலும் இதுபோன்று பாடல் ஒன்று இடம் பெறவிருக்கிறது. இப்பாடல் உலக மகா தர லோக்கலாம். இந்தப்பாடலை விஜய்யே பாடவுள்ளார் என்பதுதான் கூடுதல் சுவாரசியம். விஜய் அண்ணாதான் பாடவேண்டும் என கண்டிப்பாக கூறிவிட்டாராம் ஜி.வி. பிரகாஷ். இவரின் இசையில் உருவாகும் 50வது படம் இது என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி, பிரபு, மீனா மகள் நைனிகா, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.