போலீஸ் ஆக விஜய் பாஸாகிட்டார்… ரௌடியாக தனுஷ் ‘மாஸ்’ காட்டுவாரா?


போலீஸ் ஆக விஜய் பாஸாகிட்டார்… ரௌடியாக தனுஷ் ‘மாஸ்’ காட்டுவாரா?

தமிழில் படங்கள் தயாராகும்போதே தெலுங்கு சினிமாவையும் டார்கெட் செய்தே படங்களை தயாரிக்கின்றனர்.

அதற்கு காரணம், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஆந்திராவிலும் வரவேற்பு பெருகி வருவதே.

இந்நிலையில் தமிழில் வெளியான தெறியை தெலுங்கில் போலீஸ் என்ற பெயரில் வெளியிட்டனர்.

படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் விஜய் அங்கு பாஸாகிவிட்டாராம்.

எனவே, இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாரி படமும் தெலுங்குக்கு போகிறது. இதில் தனுஷ் லோக்கல் ரவுடியாக நடிக்க, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படம் தெலுங்கில் மாஸ் என்ற பெயரில் ஏப்ரல் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தமிழில் ராதிகா சரத்குமார் மற்றும் தனுஷ் தயாரித்திருந்த இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் வசிரெட்டி தெலுங்கு உரிமையை வாங்கி வெளியிடுகிறார்.