மார்ச் மாத இறுதியில் தனுஷின் அதிரடி விருந்து..!


மார்ச் மாத இறுதியில் தனுஷின் அதிரடி விருந்து..!

பெரும்பாலும் தனுஷின் படங்களுக்கு படப்பிடிப்பு தொடங்கும் போதே பெயர் வைத்துவிடுவார்கள். இதில் தங்கமகனை கொஞ்சம் தவிர்த்து விடலாம்.

ஆனால் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் படத்திற்கு தலைப்பிடப்படவில்லை.

ரயில், மிரட்டு என பல பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாத இறுதியில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இப்படத்தில் தனுஷின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பூஜா ஜாவேரி, கணேஷ் வெங்கட்ராம், ஹரிஷ் உத்தமன், ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.