தனுஷ் இன்று தொடங்கி வைக்க, விரைவில் இணைகிறார் கீர்த்தி..!


தனுஷ் இன்று தொடங்கி வைக்க, விரைவில் இணைகிறார் கீர்த்தி..!

எவரும் எதிர்பாராத வகையில், தனுஷ்-பிரபுசாலமன் கூட்டணியில் உருவான படம் ‘தொடரி’. இதில் தனுஷின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இவர்களுடன் கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன், தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன், ஆர்.வி.உதயகுமார், பேராசிரியர் ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைக்க, இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையில் இன்று இப்படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கியுள்ளது.

இதன் முதற்கட்டமாக தனுஷ் தன் டப்பிங் பண்களை தொடங்கிவிட்டாராம். இவரைத் தொடர்ந்து விரைவில் கீர்த்தி சுரேஷ், தன் டப்பிங் பணிகளை தொடங்கவுள்ளார்.