ரஜினி, அஜித், விஜய், சூர்யா பற்றி ட்விட்டரில் தனுஷ்!


ரஜினி, அஜித், விஜய், சூர்யா பற்றி ட்விட்டரில் தனுஷ்!

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது நாம் அறிந்ததே. தற்போது ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் உருவெடுத்து வருகிறார். ‘வேலையில்லா பட்டதாரி’, ‘காக்கா முட்டை’ உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் தனுஷ். அப்போது அவரது ரசிகர்கள் பல விதமான கேள்விகளை கேட்டனர். அவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்…

‘தங்கமகன்’ ஆடியோ எப்போது?

நவம்பர் மாதம் வெளியிட இருக்கிறோம். அருமையான மெலோடி பாடல்கள் உள்ளது. மெலோடி ரசிகர்களுக்கான விருந்து இப்படம்.

விஜய் அஜித் இருவரில் யாரை பிடிக்கும்?

அவர்களை மிகவும் பிடிக்கும். அவர்களிடமிருந்து நிறையவே கற்று வருகிறேன். இவர்களின் படங்களை தயாரிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இவர்களை விட நான் ரஜினியின் தீவிர ரசிகன்.

சூர்யா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிகச்சிறந்த உழைப்பாளி. இவரது உழைப்பே மற்றவர்களை ஊக்குவிப்பது போல இருக்கும்.

சமந்தாவுடன் நடித்த அனுபவம் பற்றி?

நல்ல திறமையான நடிகை. அவருடன் நடித்தது சந்தோஷம்.

நீங்கள் படித்த காலத்தில் உங்கள் கனவு கன்னி யார்?

குஷ்பு மற்றும் சிம்ரன்

ரஜினி படத்தின் தலைப்புகளை மட்டும் தேர்ந்தெடுப்பது ஏன்?

அது தானாகவே அமைந்து விடுகிறது. எதையும் திட்டமிடவில்லை.

இவ்வாறு ட்விட்டரில் ரசிகர்களுக்கு பதிலளித்தார் தனுஷ்.