இந்தியில் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் தனுஷ்!


இந்தியில் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் தனுஷ்!

தனுஷ் ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றிகளை குவித்து வருகிறார். தமிழ் திரையுலகை தாண்டி இந்தி படங்களில் நடித்து 2 வெற்றிகளை கொடுத்தவர். தற்போது தனது அடுத்த வெற்றியும் இந்தியில் கொடுக்க முயன்று வருகிறார்.  நிறைய கதைகளை கேட்ட அவர் தற்போது ஒரு படத்தை கமிட் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலமாக இந்தியில் அறிமுகமாகி தனது முதல் வெற்றியை தொடங்கினார் தனுஷ். இப்படத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஜோடியாக நடித்திருந்தார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் மற்றும் அக்ஷராஹாசனுடன் இணைந்து தனது இரண்டாவது படத்தை கொடுத்தார். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்த இப்படமும் பெரிய வெற்றியை தனுஷுக்கு பெற்று தந்தது.

இந்நிலையில் ராஞ்சனா இயக்குனர் ஆனந்த் எல். ராயுடன் இணைந்து மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க தயாராகி வருகிறார். முழுக்க முழுக்க காதல் காவியமாக உருவாகவிருக்கிறதாம் இப்படம்.