ப்ரேமம் வேண்டாம்… ‘சார்லி’யை கைப்பற்றிய தனுஷ்!


ப்ரேமம் வேண்டாம்… ‘சார்லி’யை கைப்பற்றிய தனுஷ்!

நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரம் எடுத்து வெற்றி பவனி வருகிறார் தனுஷ். சமீபத்தில் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ படத்தின் ரீமேக் உரிமையை தனுஷ் பெற்று இருந்ததாக கூறப்பட்டது.

இப்படம் கேரளாவில் மட்டுமல்ல தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் அதிக நாட்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. ஆனால் இதன் ரீமேக் உரிமையை பெறவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தார் தனுஷ்.

ஆனால், தற்போது துல்கர் சல்மான், பார்வதி மேனன், நெடுமுடி வேணு ஆகியோர் நடித்து கிறிஸ்துமஸ் அன்று வெளியான ‘சார்லி’ படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படத்தை தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க இருக்கிறாராம்.

‘சார்லி’ படம் வெளியாகி நான்கு நாட்களில் மட்டும் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதில் ரெஞ்சி பணிக்கர், ஜாய் மேத்யூ மற்றும் நாசர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.