முன்னாடி மாமனார் ; இப்போ மருமகன்; ஹாலிவுட் எண்ட்ரி..!


முன்னாடி மாமனார் ; இப்போ மருமகன்; ஹாலிவுட் எண்ட்ரி..!

கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வந்த தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தோம் அல்லவா.

மர்ஜன் சத்ராபி என்ற பிரபல பிரெஞ்ச் இயக்குனர் இயக்கும் படத்தில்தான் தனுஷ் நடிக்கிறாராம். ‘The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe’ என்ற ரோமானிய நாட்டு நாவல் ஒன்றை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறது.

இதில் தனுஷ் உடன் பிரபல அமெரிக்கன் நடிகை உமா தர்மன் (‎Uma Thurman) நடிக்கிறார். இவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. இவர் இரண்டு முறை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் அலெக்ஸாண்ட்ரா ‎(Alexandra Daddario) நடிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“தனுஷின் நடிப்பை பல படங்களில் பார்த்திருக்கிறேன். அவரின் புன்னகையே நம்மை கொல்லும். அவரின் இயல்பான நடிப்பே என்னை இந்த கேரக்டருக்கு அவரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கையை கொடுத்தது.

மே மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறோம். இதன் படப்பிடிப்பை இந்தியாவின் சில பகுதிகளிலும், பிரான்ஸ், இத்தாலி நாடுகளிலும் படமாக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

தமிழில் ரஜினிக்கு அடுத்தபடியாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் ஒரே நடிகர் தனுஷ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.