மீண்டும் ஒரு மாஸ் படம்… காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்…!


மீண்டும் ஒரு மாஸ் படம்… காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்…!

கொடி மற்றும் தொடரி ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

தற்போது, என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார்.

இதன்பின்னர் ஹாலிவுட் படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை என இவரது கால்ஷீட் நிரம்பி வழிகிறது.

இருந்தபோதிலும், தன் அடுத்த படத்தையும் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கிறாராம்.

கடந்த வருடம் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி படம் தனுஷ் ரசிகர்களுக்கு மாஸாய் அமைந்தது.

எனவே மாரி படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் டிசம்பரில் தொடங்குகிறாராம்.