தேசிய விருது பெற்ற ரஜினி படத்தயாரிப்பாளருடன் தனுஷ்-வெற்றிமாறன்…!


தேசிய விருது பெற்ற ரஜினி படத்தயாரிப்பாளருடன் தனுஷ்-வெற்றிமாறன்…!

தனுஷ் தற்போது கைவசம் வைத்திருக்கும் படங்களை முடித்து விட்டு விரைவில் வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவருடன் சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து ரஜினியின் ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தையும் வெற்றிமாறனே இயக்கவிருக்கிறாராம்.

இதனிடையில், சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் படம் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்றது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த இப்படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக தேர்வாகி இருந்தது.

எனவே, இப்புதிய படம் மூலம் தேசிய விருது பெற்ற மூன்று நாயகர்களும் ஒன்றாக இணையவிருக்கிறார்கள்.

இவ்வருட இறுதியில் அல்லது 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய படம் துவங்கும் என கூறப்படுகிறது.