தனுஷ், அனிருத் பிரச்சினை இன்னும் தீரலையா..?


தனுஷ், அனிருத் பிரச்சினை இன்னும் தீரலையா..?

தனுஷ், அனிருத் இருவரும் உறவினர்கள் மட்டுமல்ல.. நல்ல நண்பர்களும் கூட. இவர்களின் கூட்டணியில் வெளியான அனைத்தும் படங்களும் ஹிட்டடித்து வந்தன. எனவே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது.

ஆனால் என்ன காரணத்தினாலோ தனுஷ் நடித்து வரும் ‘கொடி’ படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இவர்கள் இடையே உள்ள கருத்து வேறுபாடு விரைவில் தீர்க்கப்பட்டு இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் ‘ரம்’ படத்தின் மூலம் பிரச்சினை நீண்டு வருவதாக தெரிகிறது.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் தற்போது ‘ரம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தை வாழ்த்தி ட்வீட் செய்திருந்த தனுஷ் ரிஷிகேஷை மட்டுமே குறிப்பிட்டு இருந்தார்.

‘ரம்’ படத்தின் பாப்புலாரிட்டிக்கு காரணமே அனிருத்தான். ஆனால் அனிருத்தை தனுஷ் குறிப்பிடவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.