தனுஷ்-எமி-சமந்தா நடிக்கும் படத்திற்கு ஒரு டைட்டில் சொல்லுங்களேன்!


தனுஷ்-எமி-சமந்தா நடிக்கும் படத்திற்கு ஒரு டைட்டில் சொல்லுங்களேன்!

தனுஷ் நடிகராகவும் ஒரு தயாரிப்பாளராகவும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஒரு நடிகராக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘ஷமிதாப்’, ‘அனேகன்’ போன்ற படங்களையும், ஒரு தயாரிப்பாளராக ‘எதிர்நீச்சல்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘காக்கி சட்டை’ என ஹாட்ரிக் வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து மாரி என்ற படத்தை இயக்கி வருகிறார். ராதிகா மற்றும் சரத்குமார் தயாரிப்பில் வளர்ந்து வரும் இந்த படத்தில் தனுஷின் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் கோடை விடுமுறை விருந்தாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு இரண்டு ஜோடிகள் என்பதும் ஒருவர் எமி ஜாக்ஸன் மற்றொருவர் சமந்தா  நடிக்கிறார் என்பதெல்லாம் தாங்கள் அறிந்ததே. தற்போது இப்படத்திற்கு டைட்டில் வைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘படத்தில் தலைப்பை யோசித்து வருகிறோம் நீங்களும் சொல்லுங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார் தனுஷ்.

என்னது முழு கதையும் தெரிஞ்சாதான் டைட்டில் சொல்வீங்களா? நல்ல கதையா இருக்கே!