தனுஷுக்காக எவ்வளவுதான் வெயிட் பண்றது..? வெற்றிமாறன் புது முடிவு..!


தனுஷுக்காக எவ்வளவுதான் வெயிட் பண்றது..? வெற்றிமாறன் புது முடிவு..!

தனுஷ் தயாரித்த, விசாரணை படத்தின் மூலம் மூன்று தேசிய விருதுகளை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

எனவே, வெற்றிமாறன்-தனுஷ் இணையும் வடசென்னை படத்தின் தொடக்க விழா அறிவிப்புக்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருந்தனர்.

ஆனால், கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வரும் தனுஷ், இப்படத்தை முடித்துவிட்டு ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

சரி இதனை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்குள் திடீரென கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன் என்று தனுஷ் அறிவித்தார். இது செப்டம்பரில் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

இதனால் பொறுமையிழந்த வெற்றிமாறன் ஒரு அதிரடி முடிவில் இறங்கிவிட்டாராம்.

வடசென்னை படத்துக்கு முன்பாகவே முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். மிகக் குறுகிய காலத்தில் இதன் மொத்த படப்பிடிப்பையும் காரைக்குடி பகுதியில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

அதற்குள் தனுஷ் தன் படங்களை முடித்துவிட்டு வடசென்னையில் வந்து இணைவார் என கூறப்படுகிறது.

அதுசரிதான்.. ஆனால் அதற்குள் தனுஷ் அடுத்த படத்தை கமிட் செய்யாமல் இருந்தா ஓகேதான்…