தனுஷ் உடன் மோதும் விஜயகாந்த் மகன்


தனுஷ் உடன் மோதும் விஜயகாந்த் மகன்

விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்துள்ள படம் சகாப்தம். எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் இப்படத்தில் நேஹா இன்ஞ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் 2010ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். புதுமுகம் சுப்ரா 2வது ஹீரோயினாக நடிக்கிறார்.

சிறப்புத் தோற்றத்தில் விஜயகாந்த் நடிக்க, ரஞ்சித், தேவயானி, தலைவாசல் விஜய், சிங்கம் புலி ஆகியோரும் நடிக்கின்றனர். சிம்பு, ரம்யா நம்பீசன், ஆண்ட்ரியா பாடிய ‘அடியே ரதியே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜனவரி 31ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. விழாவில் திரையுலகை சேர்ந்த ஒரு பிரபலமானவர் பங்கேற்று கேசட்டை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி ‘சகாப்தம்’ படம் ரிலீஸ் ஆகிறது. தனுஷ் நடித்த ‘அனேகன்’ படம் பிப்ரவரி 13 ஆம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆக, தனுசுடன் மோத இருக்கிறார் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்.

Related