தனுஷ்-கௌதம்மேனன் படம் தொடங்கியது.. நாயகி யார் தெரியுமா?


தனுஷ்-கௌதம்மேனன் படம் தொடங்கியது.. நாயகி யார் தெரியுமா?

அனேகன் மற்றும் மாரி படங்களை தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை படுவிரைவாக முடித்து கொடுத்து வருகிறார் தனுஷ்.

பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படம், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கொடி’ படம் என இரண்டும் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் தனுஷ்.

இதில் தனுஷின் நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாக நடிக்கும் ஒரு பக்கக் கதை படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை நோக்கிப் பாயும் தோட்டா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள ஒரு கல்லூரியில் தொடங்கியது.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை இரண்டு வாரங்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளனர்.