‘கொடி’ பறக்குமா?… ‘ரயில்’ வருமா?… குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்..!


‘கொடி’ பறக்குமா?… ‘ரயில்’ வருமா?… குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்..!

‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் இரு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

பிரபுசாலமன் இயக்கத்தில் ரயில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கொடி ஆகிய இரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரயில் படத்தில் நிறைய க்ராபிக்ஸ் பணிகள் இருப்பதால் அது முடிவடைய இன்னும் வெகுநாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

ஆனால் கொடி படத்தின் பணிகளோ தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு திரையரங்குகளில் தனுஷின் கொடி பறக்கும் என கூறப்படுகிறது.

அட… ஏதாவது ஒரு படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க… இல்லனா என்னை நோக்கிப் பாயும் தோட்டா அப்படின்னு தோட்டா வேகத்துல அடுத்த படத்தை ரிலீஸ் பண்ணிடப் போறாங்க…