துருக்கியில் இருந்து துள்ளி குதித்து வந்த தனுஷ்..!


துருக்கியில் இருந்து துள்ளி குதித்து வந்த தனுஷ்..!

நேற்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி விழாவில் ரஜினி, கமல், மோகன்லால், விக்ரம் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் போட்டியுடன் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

ஆனால் காலை முதல் மதியம் வரை தனுஷ் இந்நிகழ்ச்சிக்கு வரவில்லை.

கௌதம் மேனன் இயக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருவதால் தனுஷ் வருவது சந்தேகமே என்றனர்.

ஆனால் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மதியம் 3.30 மணியளவில் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து அணி வீரர்களையும் தன் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.