ரஜினியை கௌரவிக்க ‘தர்மதுரை’கள் எடுத்த முடிவு!


ரஜினியை கௌரவிக்க ‘தர்மதுரை’கள் எடுத்த முடிவு!

சீனுராமசாமி இயக்கத்தில் ‘தர்ம துரை’ படத்திற்காக மூன்றாவது முறையாக இணைகிறார் விஜய் சேதுபதி. இவர்களுடன் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவதா நாயர், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர் கே சுரேஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர். இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட இருக்கின்றனர்.

இந்நிலையில் பொங்கல் விருந்தாக ஜன. 14ஆம் தேதி இப்படத்தின் டீசரை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நாளில் வெளியிட வேறு ஒரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1991ஆம் ஆண்டு இதே நாளில்தான் ரஜினிகாந்த் நடித்த ‘தர்மதுரை’ படம் வெளியானது. எனவே 25 வருடங்களுக்கு ‘தர்மதுரை’ ரஜினியை கௌரவிக்க இதே நாளில் டீசரை வெளியிடவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.