தோனி பாராட்டிய தனுஷின் ‘காக்கா முட்டை’!


தோனி பாராட்டிய தனுஷின் ‘காக்கா முட்டை’!

கடந்த வாரம் ஜூன் 5ஆம் தேதி தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ வெளியானது. மணிகண்டன் இயக்கிய இப்படத்தில் விக்னேஷ், ரமேஷ் என்ற இரண்டு சிறுவர்களும், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபு ஆண்டனி, ரமேஷ் திலக், யோகிபாபு மற்றும் கௌரவ தோற்றத்தில் சிம்புவும் நடித்திருந்தனர்.

தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்ற பின்னரே இப்படம் வெளியானது. படம் வெளிவருவதற்கு முன்பே லாபத்தை சம்பாதித்துவிட்டோம் என்று தனுஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படம் முதல் நாள் ரூ. 95 லட்சத்தை வசூல் செய்தது. படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்ததால் இரண்டாம் நாளில் ஒரு கோடியை தாண்டியது. இனிவரும் நாட்களில் படத்திற்கு மிகப்பெரிய வசூலை எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தேசிய விருது பெற்ற இரண்டு சிறுவர்களையும் சந்தித்து இருவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ‘காக்கா முட்டை’யை பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ‘ரஞ்சனா’, ‘ஷமிதாப்’ போன்ற இந்திப் படங்களில் நடித்துள்ளதால் தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் பாலிவுட்டில் வரவேற்பை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.