அனுஷ்கா இடத்தில் அஞ்சலியா?


அனுஷ்கா இடத்தில் அஞ்சலியா?

‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை… அவளுக்கு யாருக்கும் இணையில்லை…’ என்ற பாடல் கேட்கும்போதெல்லாம் நிச்சயமாக நடிகை அஞ்சலியின் முகம் வந்துச்செல்லும். ‘அங்காடித்தெரு’ படத்தில் இவரது பண்பட்ட நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

தமிழில் தன்அறிமுக படமான ‘கற்றது தமிழ்’ படத்திலும், அதன்பிறகு தான் நடித்த ‘கருங்காலி’, ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற படங்களில் தன் நடிப்பால் தனிமுத்திரையை பதித்தவர் இவர். இந்நிலையில்… சித்தியுடன் சிக்கல், டைரக்டர் களஞ்சியத்தின் டார்ச்சர் என்றெல்லாம் சர்ச்சைகளில் சிக்கி அயல்நாடு பறந்துவிட்டார் அஞ்சலி. எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்ற கேள்விக்கு தென்னிந்திய மீடியாக்கள் விடை தேடிக்கொண்டிருக்க, இதோ வந்துட்டேன்… என்றவாறு மீடியாக்களில் தலைகாட்ட செய்தார்.

அதன்பிறகு தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக ‘அப்பாடக்கரு’, விமல் ஜோடியாக ‘மாப்ளசிங்கம்’ போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் தலா ஒரு படத்திலும் நடிக்கிறார்

இந்நிலையில், இவர் சமீபத்தில் நடித்த தெலுங்கு காமெடி-த்ரில்லர் படமான ‘கீதாஞ்சலி’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, வேறுஒரு படத்தில் அனுஷ்கா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, அப்படத்தின் இயக்குனர் அசோக்கிடம் கேட்டதற்கு… ‘அஞ்சலியை ஒப்பந்தம் செய்தது உண்மைதான். ஆனால், அதுவேறு ஒரு படத்திற்கான ஒப்பந்தம்’ என்று விளக்கமளித்தார்.