‘விஐபி’ & ‘தங்க மகன்’ படத்திற்கு உள்ள வேற்றுமைகள்!


‘விஐபி’ & ‘தங்க மகன்’ படத்திற்கு உள்ள வேற்றுமைகள்!

இவ்வருடத்தில் மட்டும் தமிழில் தனுஷ் நடித்த ‘அனேகன்’, ‘மாரி’ என இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வேல்ராஜ் இயக்கியுள்ள ‘தங்க மகன்’ படமும் வெளியாக தயாராகிவிட்டது.

இந்நிலையில் கடந்த வருடம் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கும் இந்த ‘தங்க மகன்’ படத்திற்கும் எந்தவொரு ஒற்றுமையும் இல்லை என இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் இந்த இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகள் என்ன என்பதை பார்ப்போம்.

· ‘விஐபி’ படத்தில் தாய் சரண்யா மற்றும் மகன் தனுஷ் இடையிலோன உறவே பிரதானமாக இருந்தது. ஆனால் இதில் தனுஷிற்கும் தந்தை கே.எஸ்.ரவிக்குமாருக்கும் உள்ள உறவே ஹைலைட்டாக இருக்குமாம்.

· ‘விஐபி’ படத்தில் தனுஷுக்கு அமலாபால் மட்டுமே ஜோடியாக இருந்தார். ஆனால் இந்த ‘தங்க மகனுக்கு’ இரண்டு ஜோடிகளாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களில் இந்த இரண்டு பெண்களையும் தனுஷ் சந்திக்கிறாராம்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.