‘தெறி’யை வாங்கிய சூர்யா-கார்த்தியின் பேவரைட் டைரக்டர்..!


‘தெறி’யை வாங்கிய சூர்யா-கார்த்தியின் பேவரைட் டைரக்டர்..!

விஜய்யின் தெறி வெளியாக இன்னும் 10 நாட்கள் கூட இல்லை. எனவே, கோடை வெயில் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இவை இரண்டையும் தாண்டி, படத்தின் வியாபாரம் அனல் பறக்கிறதாம்.

மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளின் ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது தமிழக விநியோக உரிமைகள் கொடி கட்டி பறக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, கோவை, சேலம் ஏரியாக்கள் விற்று தீர்ந்த நிலையில், தற்போது மதுரை, ராமநாதபுரம் ஏரியா உரிமை கைமாறியுள்ளது.

இதன் உரிமையை இயக்குனர் அமீர் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முன்னணி நடிகர்களான சூர்யாவுக்கு மௌனம் பேசியதே மற்றும் கார்த்திக்கு பருத்தி வீரன் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.