பெண் இயக்குனரை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்கள்..!


பெண் இயக்குனரை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்கள்..!

இந்தாண்டின் தொடக்கமே பெண் இயக்குனர் கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கத்துடன் துவங்கியது. தன் முதல் படத்திற்கே பலரது பாராட்டுக்களை பெற்றார்.

அதுபோல் ஜனவரி மாதம் முடிவதற்குள் மற்றொரு பெண் இயக்குனர் சுதா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ வெளியானது. பலரது பாராட்டுக்களை பெற்ற இப்படம் திரையரங்களில் இன்னும் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தை மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் பாராட்டுவது பெரிய விஷயமில்லை. இத்துறையைச் சார்ந்த இரண்டு ஜாம்பவான்களே பாராட்டித் தள்ளியுள்ளனர்.

இப்படத்தை பார்த்த இயக்குனர் பாலா, இறுதிச்சுற்று இயக்குனரிடம் இருந்து தான் நிறைய கற்றுக் கொண்டதாக பாராட்டியிருந்தார். தற்போது இயக்குனர் ஷங்கரும் சுதாவை பாராட்டியுள்ளார்.