பாலா… கௌதமின் அதிரடி முடிவு: திணறப்போகும் ஹீரோக்கள்??


பாலா… கௌதமின் அதிரடி முடிவு: திணறப்போகும் ஹீரோக்கள்??

மற்ற மொழிகளில் ஒரே படத்தில் மூன்று அல்லது நான்கு முன்னணி நடிகர்கள் கூட இணைந்து நடிப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அப்படியில்லை. இதற்கு நடிகர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனைதான் காரணம் எனலாம். அளவான பட்ஜெட்டும் மற்றொரு தடையாக உள்ளது.

ஆனால் தற்போது தயாராகவுள்ள பாலாவின் புதிய படம் ஹீரோக்களுக்கு ஈகோ பிரச்சனையில்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், அர்விந்த் சாமி, அதர்வா மற்றும் ராணா என ஐந்து ஹீரோக்கள் இணைந்து நடிக்கிறார்கள். படம் குறித்த அறிவிப்பு வந்ததும் தமிழ் சினிமா ஆச்சரியத்தில் மூழ்கியது வேறு கதை.

மற்றொரு கதை, ஜெயம் ரவி நடிக்க ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கவிருக்கிறார் கௌதம் மேனன். இதில் பாலாவுக்கு போட்டியாக பல அதிரடிகளை செய்யவிருக்கிறாராம் இயக்குனர். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் 10 முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒப்பந்தம் ஆனவுடன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளன.

பாலா ஒரு படத்தை பல வருடம் எடுப்பார். கௌதம் வேறு வரிசையில் நிற்க வைக்கும் சபதமெடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் கோலிவுட் ஹீரோக்கள் மற்றவர்களுக்கு கால்ஷீட் எனச் சொல்லப் போகிறார்கள். வேறு படம் பண்ணாமல் திணறப்போகிறார்கள்.