‘அரசை எதிர்பார்க்கக் கூடாது…’ – இயக்குனர் சேரன்!


‘அரசை எதிர்பார்க்கக் கூடாது…’ – இயக்குனர் சேரன்!

அண்மையில் பெய்த கனமழையால் தமிழகம் இன்னும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தவிக்கின்றனர். இதில் சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களை மீட்டெடுக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்கள் சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும் சித்தார்த், விஷால், கார்த்தி, மயில்சாமி, பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சேரன் மற்றும் அமீர் ஆகிய இருவரும் தங்கள் சார்பில் மருத்துவ முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநகராட்சி தொழிலாளர்களுடன் இணைந்து தெருக்களையும் சுத்தம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சேரன் கூறியதாவது…. “நம் அரசை எல்லாவற்றிற்கும் எதிர்பார்க்க கூடாது. நாம் இருக்கும் பகுதிகளில் நாமே சுத்தம் செய்ய அதற்கான செயலில் இறங்குவதே சிறந்தது” எனக் கூறியுள்ளார்.