பாலசந்தரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் சமுத்திரக்கனி..!


பாலசந்தரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் சமுத்திரக்கனி..!

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் சமுத்திரக்கனி.

இந்நிலையில் “கடவுளை காண்போம் வா” என்று பெயரிடப்பட்ட ஒரு படத்தை இயக்கவிருந்தார் கே. பாலசந்தர்.

அதற்குள் அவரது மகன் கைலாசம் காலமானார். அந்த பேரதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீள்வதற்குள் கே.பியும் காலமானார்.

தற்போது பாலசந்தரின் சீடரான சமுத்திரகனி பாலச்சந்தரின் கடைசி ஆசையை நிறைவேற்ற போகிறாராம். அந்த கதையை இவர் இயக்க முடிவு செய்துள்ளார்.

இதற்கான அனுமதியை பாலச்சந்தர் குடும்பத்திடமிருந்து இருந்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, பாலசந்தரின் கதையை கையில் எடுப்பார் சமுத்திரக்கனி எனத் தெரிகிறது.

Related