விஜய் படத்தை வாங்கினார் இயக்குனர் லிங்குசாமி


விஜய் படத்தை வாங்கினார் இயக்குனர் லிங்குசாமி

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்தும் சில படங்களை வாங்கி வெளியிட்டு வரும் நிறுவனம் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். ‘தீபாவளி’ படத்தில் தொடங்கிய இவர்களது இந்த பயணம் தற்போது வரை தொடர்கிறது.

‘வழக்கு எண் 18/’9, ‘சதுரங்க வேட்டை’, ‘கும்கி’, ‘கோலி சோடா’, ‘இவன் வேறமாதிரி’, ‘மஞ்சப்பை’ போன்ற தரமான படங்களை வெளியிட்டனர். அண்மையில் கமல்ஹாசனுடன் இணைந்து ‘உத்தமவில்லன்’ படத்தை தயாரித்து வெளியிட்டனர். தற்போது சிவகார்த்திகேயன், சூர், கீர்த்தி நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ தயாரித்து வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் அடுத்த வெளியீடாக விஜய் வசந்த நடித்த ‘ஜிகினா’ படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் வசந்த, சானியாதாரா நாயகன் நாயகியாக நடிக்க, சிங்கம்புலி, ‘கும்கி’ அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, ஜோன் என்ற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி ஆகிய படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது… “விஜய் வசந்த நடித்துள்ள ‘ஜிகினா’, இப்படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமிக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும். இவைமட்டுமல்லாமல் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தரமான படைப்புகளில் இப்படம் ஒரு முக்கிய பங்கை வகுக்கும்” என்றார்.