“துப்பாக்கி இரண்டாம் பாகத்திற்கு வேலையில்லை -​​ஏ.ஆர்.முருகதாஸ்..!​”​


“துப்பாக்கி இரண்டாம் பாகத்திற்கு வேலையில்லை -​​ஏ.ஆர்.முருகதாஸ்..!​”​

மாஸ், அதிரடி ஆக்ஷன், கமர்ஷியல் மசாலா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த விஜய்க்கு ஒரு பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் ‘துப்பாக்கி’ படத்தை சொல்லலாம்.

​ முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படம் ஹாலிடே என்ற பெயரில் இந்தியில் முன்பே ரீமேக் செய்யப்பட்டுவிட்டது. கத்தி படம் தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இந்த இரண்டு படங்களின் வெற்றியை​த்​ தொடர்ந்து விஜய், முருகதாஸின் ராசி​க்​ கூட்டணி மீண்டும் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை​க்​ கொடுக்​க அடிப்படை வேலைகள் துளிர் விட்டுள்ளது.

சமீபத்திய சந்திப்​பு ஒன்றில் ​இயக்குனர் ​முருகதாஸ்​ ​​ “துப்பாக்கி படம் கதைப்படி முடிந்துவிட்டது. எனவே இரண்டாம் பாகத்திற்கு வேலையில்லை. ஆனால் விஜய்யுடன் நான் விரைவில் இணைவேன். அது குறித்த அறிவிப்பு வரும்” என​க் ​ கூறியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.