விஷாலின் மருதுவில் கனெக்ஷன் ஆன சிங்கம், புலி படங்கள்..!


விஷாலின் மருதுவில் கனெக்ஷன் ஆன சிங்கம், புலி படங்கள்..!

முத்தையா இயக்கத்தில் விஷால்-ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘மருது’ திரைப்படம் மே 20ஆம் தேதி வெளியாகிறது.

இவர்களுடன் சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து முத்தையா கூறியதாவது…

“மருது என் இயக்கத்தில் வெளிவரவுள்ள மண்மனம் மாறாத படம். இதில் பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள தவிர்க்க முடியாத உறவை பற்றி சொல்லியிருக்கிறேன்.
என்னுடைய படத்தில் வரும் எல்லா பாத்திரமும் முக்கியமானதாக இருக்கும்.

ஸ்ரீதிவ்யா , ராதாரவி , ஆர்.கே.சுரேஷ் என அனைத்து பாத்திரங்களும் முக்கியமான பாத்திரங்கள்தான்.

நான் சூப்பராக படம் எடுக்கிறேனா ? என எனக்குத் தெரியாது. ஆனால் தப்பா படம் இயக்கவில்லை. ஒரு கடைகோடி ரசிகனாக இருந்துதான் என் படத்தை நான் இயக்குவேன்.

இமானுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. சூறாவளி டா என்ற பாடல் மருது எப்படிபட்டவன் என்பதை விவரிக்கும் பாடலாக இருக்கும்.

சூரியின் பாத்திரம் மிகச்சிறந்த கதாபாத்திரமாக இருக்கும். என்னுடைய இரண்டு படங்களிலும் அவரை பயன்படுத்த அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை.

எல்லா ஊர்களிலும் மூட்டைகளை சுமக்கும் லோட்மேன் இருப்பார்கள். அவர்களுடைய கதாபாத்திரத்தில்தான் விஷால் நடித்துள்ளார். அவருடைய உயரமும், உடல் அமைப்பும் , நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தி உள்ளது.

இந்த கேரக்டருக்காக என்னுடைய பெரியப்பாவை மாடலாக எடுத்து கொண்டேன். அவர் கையில் சிங்கத்தையும், நெஞ்சில் புலியையும் பச்சை குத்தி இருப்பார்.

அதுபோலதான் விஷால் மிரட்டலாக இருப்பார். சிங்கத்துக்கு ஒரு ஆஜானுபாகுவான தோற்றம் உண்டு. புலி தன்மானம் உள்ள ஒரு மிருகம்.

அதனால் உழைக்கும் வர்கத்தை சேர்ந்த ஒருவன் அவ்விரு மிருகங்களின் உருவத்தையும் பச்சை குத்தி இருப்பான்.

இவ்வாறு தன் படம் பற்றி கூறினார் முத்தையா.