‘என் மகன் சக்திக்காக கதை கேட்க மாட்டேன்’ – பி.வாசு..!


‘என் மகன் சக்திக்காக கதை கேட்க மாட்டேன்’ – பி.வாசு..!

தமிழில் தற்காப்பு, கன்னடத்தில் சிவலிங்கா ஆகிய படங்களை தொடர்ந்து, படம் பேசும் படத்தில் நடித்து வருகிறார் சக்திவேல் வாசு.

இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் நடிக்கிறார். இதற்கான பூஜை மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குனர் பி.வாசு, நடிகர்கள் சக்திவேல் வாசு, கணேஷ் வெங்கட்ராம், நடிகை நிகிஷாபடேல், அங்கனா ராய், எம். எஸ். பாஸ்கர், படத்தின் இயக்குனர் கௌதம், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.பாஸ்கர் பேசியது…

“நானும் திரைக்கதை ஆசிரியர் விமலும் படிக்கும் காலத்தில் இருந்து நண்பர்கள். அவருடைய மகனின் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. அபியும் நானும் படத்தை தொடர்ந்து கணேஷ் வெங்கட்ராமனுடன் மீண்டும் இதில் நடிக்கிறேன்” என்றார்.

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு பேசியது….

“இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் ஒரே எண்ணத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த இயக்குநர் கௌதம் ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்றும் ஒரு நபர் தான்” என்றார்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியது…

“நல்ல கதைகளில் பணியாற்றுவதுதான் எனக்கு பிடிக்கும். இந்தப்படமும் அந்த வகையை சார்ந்த ஒரு படம்தான்” என்றார்.

இயக்குனர் பி.வாசு பேசியது…

“இன்றைய இயக்குனர்கள் குறும்படங்களை இயக்கிவிட்டு தங்களை நிரூபித்து விட்டு சினிமாவுக்கு வருகின்றனர்.

நான், இயக்குநர் ஸ்ரீதர் அவர்களுடன் உதவி இயக்குனராக வேலை செய்யும் போது அவர் என்னை பெயரை சொல்லி கூப்பிடுவதே அரிதான விஷயமாக பார்ப்பேன்.

நான் சக்திவேல் நடிக்கும் படத்தின் கதைகளை கேட்பது இல்லை. ஆனால் அவரது படங்களின் தயாரிப்பாளர்களை மட்டும் தெரிந்து கொள்வேன். 7 நாட்கள் படத்தின் கதை ஒரு அருமையான கதையாகும்.” என்றார்.