நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை? லேடி சூர்யா.. சொல்கிறார் பாண்டிராஜ்.!


நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை? லேடி சூர்யா.. சொல்கிறார் பாண்டிராஜ்.!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி நயன்தாரா குறித்து பாண்டிராஜ் கூறியதாவது…

“சிம்புவும் நயனும் அவர்களின் காதல் தோல்விக்கு பிறகு இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை கேட்டவுடன் நயன்தாரா ஒரு நடிகையாக உடனே ஓகே சொல்லிவிட்டார்.

நிஜமாலுமே ஒரு அருமையான நடிகை அவர். காலை 9 மணிக்கு சூட்டிங் என்றால் 8.50 மணிக்கே வந்துவிடுவார். ஒரு நாள் கூட தாமதமாக வரமாட்டார்.

இதற்கு முன்பு நான் சூர்யாவிடம் இதே நேரம் தவறாமையை பார்த்தேன்.

எனவே, இந்த விஷயத்தில் நான் நயன்தாராவை லேடி சூர்யா என்றுதான் அழைப்பேன்” என்றார்.

அப்போ நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லையா? அட ஊருக்குள்ள அப்படித்தான் சொல்றாங்கப்பு…