நயன்தாரா-சூரியை வைத்து சிம்புவை கலாய்த்த பாண்டிராஜ்…!


நயன்தாரா-சூரியை வைத்து சிம்புவை கலாய்த்த பாண்டிராஜ்…!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள இது நம்ம ஆளு படம் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக் கொண்டே போகிறது.

இப்படம் விரைவில் சென்சாருக்கு செல்லவிருப்பதாகவும் விரைவில் படம் வெளியாகும் எனவும் சிம்பு சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மறைமுகமான தகவலை வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில் நயன்தாரா, சூரியிடம் சிம்புவின் மைனஸ் பாய்ண்ட்ஸை கேட்பது போல உள்ளது. அதற்கு சூரியோ… “எங்கேயும் சொன்ன நேரத்துக்கு வரமாட்டான், அவன் நினைச்ச நேரத்துக்குத்தான் வருவான்” என்று சொல்வதாக உள்ளது.

இறுதியாக சத்தியமா சீக்கிரமா வர்றோம் என்ற தகவலும் சொல்லப்பட்டுள்ளது.

இது படத்தில் உள்ள ஒரு காட்சி என்றாலும், இது சிம்புவுக்கான மெசேஜ் என்பது போலவே சித்திக்கப்பட்டுள்ளது.