பாண்டிராஜ் படங்களை தயாரிக்கும் சூர்யா, விஷால், சிம்பு!


பாண்டிராஜ் படங்களை தயாரிக்கும் சூர்யா, விஷால், சிம்பு!

இன்றைய குழந்தைகளுக்கு பிடித்த இயக்குனர் யார்? என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பெயரில் நிச்சயமாக பாண்டிராஜ் பெயர் இருக்கும். ‘பசங்க’ படம் முதல் இன்றைய ‘ஹைக்கூ’ வரை குழந்தைகளை கவரும் வகையில் படங்களை கொடுத்து கொண்டிருப்பவர். கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ‘கோலி சோடா’ படத்தின் வசனகர்த்தா இவர்தான்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக்குமார், பிந்துமாதவி, அமலாபால், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தைதனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்திருக்கிறார் சூர்யா.

பல பிரச்சினைகளால் இதுவரை முடியாமல் இருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை சிம்பு தன் சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு-நயன்தாரா ஜோடியுடன் ஆண்ட்ரியா, சந்தானம், சூரி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்க சிம்புவின்  தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார்.

இப்படங்களை தொடர்ந்து தற்போது விஷால் நடிக்க ஒரு புதிய படத்தினை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். அப்படத்தை விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பாக தயாரிக்கவுள்ளார்.

ஆக… பாண்டிராஜ் இயக்கும் படங்களில் நடிக்கும் ஹீரோக்களே அவரவர் படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.