ஹன்சிகா ‘தொப்புளுக்கு’ லொக்கேஷனை மாற்றிய இயக்குனர்!


ஹன்சிகா ‘தொப்புளுக்கு’ லொக்கேஷனை மாற்றிய இயக்குனர்!

விஷால், நயன்தாரா இணைந்து நடித்த சத்யம்’  படத்தை இயக்கியவர் ராஜசேகர். இப்படம்  தெலுங்கில் சல்யூட்என்ற பெயரில் வெளியானது. இப்படத்தை பார்த்த முன்னாள் கனவுக்கன்னி நடிகை ஜெயப்பிரதா  தன் மகன் நடிக்கும் படத்தை இயக்க இயக்குனருக்கு வாய்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் நித்யாமேனன் நடித்த ‘இஷ்க்ன்ற தெலுங்கு படம் உயிரே உயிரே என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ஜெயப்பிரதாவின் மகன் சித்து நாயகனாக நடிக்க நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். இவர்களுடன் அஜய், சாயா சிங், ஆடுகளம் நரேன், ரோகினி, உமா பத்மநாபன், ஜெகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனுப் ரூபேன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இப்படத்தில் கவிஞர் விவேகா எழுதிய பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பாடல் குறித்து படத்தின் இயக்குனர் ராஜசேகர் கூறியதாவது….

ஒரு திருமண நிகழ்ச்சி. முதன்முறையாக ஹன்சிகாவை சேலையில் பார்க்கிற ஹீரோ அவர் அழகில் மயங்கி விழனும். இதுதான் சிச்சுவேஷன். அதற்கு வடிவம் கொடுத்து பாடலை எழுதியிருந்தார் விவேகா. அந்த வரிகள்
தேவதை பார்க்கிறாள்உயிரையே கேட்கிறாள்
இதுவரை பார்த்ததில் இவள்தான் அழகி
உலகத்தின் மலர்களுக்கே இவள்தான் தலைவி
வெண்ணையில் செய்த பொம்மை போல தேகமா?’
என்று தமிழை உருக்கி பாடலாக எழுதியிருந்தார். இப்பாடலை ஹரிஹரன் பாடியுள்ளார்.

இப்பாடலில் ஹன்சிகாவின் கண்ணில் உள்ள மையை எடுத்து நெற்றியில் ஹீரோ சித்து வைக்க வேண்டும். அப்படித்தான் முதலில் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இக்காட்சி படமாக்கும்படும்போது நெற்றியிலிருந்து ஹன்சிகாவின் தொப்புள் ஏரியாவுக்கு லொகேஷனை மாற்றி விட்டோம். இக்காட்சிக்கு ரசிகர்களிடையே நிச்சயம் செம ரெஸ்பான்ஸ் இருக்கும்என்றார்.