‘சமூகத்திற்காக யோசிக்கும் தனுஷை பாராட்டனும்..’ பிரபு சாலமன்..!


‘சமூகத்திற்காக யோசிக்கும் தனுஷை பாராட்டனும்..’ பிரபு சாலமன்..!

புதுமுகங்களை வைத்து, மைனா, கும்கி, கயல் என ஹாட்ரிக் வெற்றி அடித்தவர் இயக்குனர் பிரபுசாலமன். தற்போது மாஸ் ஹீரோவான தனுஷை வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்கியுள்ளார்.

இதில் தனுஷ் உடன் கீர்த்தி சுரேஷ், பூஜா ஜாவேரி, கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் குறித்து பிரபு சாலமன் கூறியதாவது…

“சில படங்களுக்கு புதுமுகம் தேவைப்படும். சில படங்களுக்கு அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுவார்கள். இதற்கு தனுஷ் தேவைப்படவே அவரை ஒப்பந்தம் செய்தோம். சில நடிகர்களை ஒப்பந்தம் செய்தால் கதைகளில் சில காம்பரமைஸ் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்படத்தில் அப்படியான சந்தர்ப்பம் தேவைப்படவில்லை.

கதையை கூட கேட்காமல் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் தனுஷ். அவர் கேரக்டர் என்ன என்பதை மட்டுமே கேட்டார்.

சூட்டிங் ஆரம்பித்து சில நாட்களுக்கு பிறகுதான் கதையை சொன்னேன் . அதை ஏற்றுக் கொண்டு ஒரு புதுமுகம் மாதிரி அருமையாக நடித்துக் கொடுத்தார். மானிட்டர் கூட பார்க்க மாட்டார். ஓடும் ரயிலில் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஹாலிவுட்டிலும் வெற்றி பெறுவார். காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்களின் மூலம் சமூகத்திற்காக யோசிக்கிறார். நிச்சயம் அவரை பாராட்ட வேண்டும்” என்றார் பிரபுசாலமன்.