‘கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும்…?’ சொல்கிறார் விக்னேஷ்..!


‘கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும்…?’ சொல்கிறார் விக்னேஷ்..!

நீண்ட நாட்களுக்கு பிறகு விக்னேஷ் நடித்து ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் ‘அவன் அவள்’. இப்படத்தில் விக்னேஷ் ஜோடியாக தேவிகா மாதவன் மற்றும் சந்திரிகா நடித்துள்ளனர்.

இவர்களுடன் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவா லட்சுமணன் செவ்வாளை, ஆதிசிவன் சுப்புராஜ், சின்ராசு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரவி சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். காயன்ஸ் பிக்சர்ஸ் சார்பாக உமா மகேஸ்வரி தயாரிக்கும் இப்படத்தை ராம்கிரீஷ் மிரினாளி இயக்குகிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“இந்த ‘அவன் அவள்’ படம் பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். அப்படி இல்லாமல் ஒன்றை ஒப்பிட்டு அது உன்னை விட சிறந்தது இது உன்னை விட சிறந்தது என்று பேசி மனதை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி வாழ்ந்த ஒருவனின் வாழ்க்கைதான் இந்த படம். கணவன் மனைவி எப்படி வாழவேண்டும்? என்பதை த்ரில்லர் கலந்து சொல்லியிருக்கிறோம்” என்றார் இயக்குனர் ராம்கிரிஷ் மிரினாளி.