நயன்தாராவை விட்டு அஞ்சலியை சுற்றும் இயக்குனர்கள்..!


நயன்தாராவை விட்டு அஞ்சலியை சுற்றும் இயக்குனர்கள்..!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு சினிமா உலகையும் கலக்கி வருபவர் நயன்தாரா. குடும்பக் கதை, சென்டிமெண்ட் கதை, த்ரில், காதல் என எந்தவிதமான ரோல் என்றாலும் நயன்தாராவுக்கு அல்வாவுக்கு சாப்பிடுவது மாதிரி.

தற்போது இவரது கைவசம் திருநாள், இது நம்ம ஆளு, காஷ்மோரா, இருமுகன், மற்றும் ஒரு தெலுங்கு படம் உள்ளது.

இதனால் இவரின் மவுசும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. மவுசு கூடினால் அடுத்து என்ன? சம்பளத்தை உயர்த்துவது தானே… இந்த அழகுப் புயலும் சம்பளத்தை கிர்…ரென… ரூ. 4 கோடி வரை உயர்த்திவிட்டாராம்.

இதனால் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இனி நயன்தாராவுக்காக காத்திருந்தால் சரிவராது என்று நினைத்த அவர்கள் தங்கள் படங்களில் அஞ்சலியை ஒப்பந்தம் செய்ய தயாராகி வருகிறார்களாம்.

சமீபத்தில் பேய் படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகிய இயக்குனர் அவரின் சம்பளத்தை கேட்டு தலைச்சுற்றி, அஞ்சலி பக்கம் சென்றுவிட்டாராம்.

மேலும் அஞ்சலியின் சம்பளமும் ரூ.1 கோடிக்கு குறைவாக இருப்பதால் இந்த தாவல்கள் அதிகம் நடைபெற்று வருகிறதாம்.