‘ரஜினி, சூர்யா, இளையராஜா பற்றி கமலின் அசத்தலான பதில்கள்!


‘ரஜினி, சூர்யா, இளையராஜா பற்றி கமலின் அசத்தலான பதில்கள்!

நேற்று தீபாவளி திருநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை டிவி சேனல்கள் ஒளிப்பரப்பின. இதில் ஒரு தனியார் சேனல் நடத்திய தீபாவளி நிகழ்ச்சியில் கமல்ஹாசன். பங்கேற்றார். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கமலிடன் பல கேள்விகளை கேட்டனர்.

கமல்ஹாசனும் தன் ஸ்டைலில் மிக அருமையாக பதிலளித்தார்.
இதில் கமலுடன் நடித்த மற்றும் பணியாற்றிய கலைஞர்கள் போட்டோக்களை காண்பித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவரும் அந்த கலைஞர்களை பற்றி சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவருடன் பணியாற்றிய ரஜினி, ஸ்ரீதேவி, ஊர்வசி, ஸ்ரீபிரியா, கோவைசரளா, எம்.எஸ்.விஸ்வநாதன், மனோரமா, இளையராஜா, வாலி மற்றும் சூர்யா உள்ளிட்ட கலைஞர்களை பற்றி கேட்டனர்.

அதில் ஸ்ரீதேவியை பற்றி கேட்டபோது… “ஸ்ரீதேவியுடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். நான் ஏதாவது கொஞ்சம் அதட்டலாக கேட்டாலே ஸ்ரீதேவி பயந்துவிடுவார். அவர் கொஞ்சம் பயந்த சுபாவம். அவர் என் குடும்பத்தில் ஒருவரை போன்றவர். சொல்லப்போனால் அவர் எனக்கு தங்கை மாதிரி.

மேலும் ரஜினியை பற்றி கேட்டபோது…. ரஜினிகாந்த் என்றாலே நட்பு. அவர் நட்பின் அடையாளம் என்றார். மனோரமா என்றால் அன்பு. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்றால் நம் வாழ்க்கை, வாலி என்றால் பெருந்தன்மை என்றார்.

சூர்யா பற்றி கேட்டதற்கு அவர் அவரது அப்பா சிவக்குமாரைப் போன்றவர் என்றும் இளையராஜாவை பற்றி கேட்டதற்கு… அவரிடம் இருந்து அவருக்கு தெரியாமலே பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எனக்கு குரு” என்றார்.