சூர்யா-ஜோதிகா மகள் தியாவிடம் கற்றுக் கொள்வோம்!


சூர்யா-ஜோதிகா மகள் தியாவிடம் கற்றுக் கொள்வோம்!

சூப்பர் ஹிட் நாயகனாக வலம் வந்த நடிகர் சூர்யா தற்போது தரமான தயாரிப்பாளர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆகிவிட்டார். திரைத்துறை தவிர்த்து மக்கள் நலனுக்காக பல நற்காரியங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் ‘யாதும் ஊரே’ என்ற இயக்கத்தை தனது ‘அகரம் பவுண்டேஷன்’ மூலமாக தொடங்கினார். இந்த இயக்கத்தில் சேர வருங்கால தலைமுறையை அவர் கேட்டுக் கொண்டார்.

இதில் பலரும் சேர ஆர்வமாக உள்ள நிலையில், சூர்யா-ஜோதிகாவின் செல்ல மகள் தியா இந்த இயக்கம் தொடர்பான பணிகளை தற்போதே தொடங்கிவிட்டாராம்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தன் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது… ‘கிரேட்.. எங்கள் மகள் தியா, எங்கள் வீட்டுக்குள் ப்ளாஸ்டிக் பைகள் உபயோகப் படுத்தக் கூடாது என கூறிவிட்டார். வீட்டுக்குள் அது வருவதையும் தவிர்த்து விடுகிறார். நாமும் மாறுவோம்’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பல ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்பாவைப் போல் பிள்ளை எனவும் சூர்யா மகளை பாராட்டி, நாங்களும் இதை பின்பற்றப் போகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.