சூப்பர் ஸ்டார் ரூட்டுக்கு வருகிறாரா இளைய தளபதி..?


சூப்பர் ஸ்டார் ரூட்டுக்கு வருகிறாரா இளைய தளபதி..?

அரசியலில் இல்லாவிட்டாலும், கடந்த 25 வருடங்களாக அரசியலுடன் இணைத்தே பேசப்பட்டு வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஒரு சில தேர்தல்களில் சில கட்சிகளை ஆதரித்தார். எனவே ரசிகர்களும் அவரது கட்டளைபடி அந்த கட்சிகளுக்காக வாக்கு சேகரித்தனர்.

ஆனால் சமீபகாலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியே காணப்படுகிறார். எந்த ஒரு வாய்ஸ்ம் கொடுப்பதில்லை.

மேலும் ரசிகர்கள் கட்சிப் பணி செய்வது அவர்களது சொந்த விருப்பம். அதில் தன் பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது என கூறிவருகிறார்.

தற்போது இதே வழியில் இளைய தளபதி விஜய்யும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரது மக்கள் இயக்கம் எந்த கட்சிக்கு இத்தேர்தலில் ஆதரவளிக்க போவது இல்லை எனவும் ரசிகர் மன்றம் சார்பில் எந்த கட்சிக்கும் ஆதரவாக ரசிகர்கள் செயல்படக் கூடாது எனவும் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.