வதந்திகளை நம்ப வேண்டாம்… ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்..!


வதந்திகளை நம்ப வேண்டாம்… ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்..!

சமீபகாலமாக சிம்புவை சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சையோ, வதந்தியோ சுற்றி வருகிறது.

ஓரிரு மாதமாக பீப் பாடல் சுற்றி வந்த நிலையில், அவரது இது நம்ம ஆளு படம் குறித்த வதந்திகள் தற்போது நிகழ்ந்து வருகிறது.

சிம்பு நடித்தாலே அந்த படங்கள் வெளிவராது, கண்டிப்பாக பிரச்சினை வரும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து சிம்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

இது நம்ம ஆளு விரைவில் சென்சார் செய்யப்படவுள்ளது. ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் அமைதி காக்க வேண்டுகிறோம். படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Related