‘இதுமாதிரி நடிக்க என் கணவரை கூப்பிடாதீங்க…’ கமீலா நாசர் வருத்தம்.!


‘இதுமாதிரி நடிக்க என் கணவரை கூப்பிடாதீங்க…’ கமீலா நாசர் வருத்தம்.!

எல்ரெட் குமார் தயாரிப்பில் சரத் இயக்கிய கோ 2 கடந்த மே 13ஆம் தேதி வெளியானது.

பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பாலசரவணன், பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்த நாசரின் மனைவி கமீலா தன் கணவரின் கேரக்டர் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது… “படத்தில் முக்கியத்துவமே இல்லாத கேரக்டர்களில் நடிக்க தயவுசெய்து நாசரை அழைக்க வேண்டாம்.

கோ 2 படம் குறித்து எனக்கு வரும் அழைப்புகளால் இதை தெரிவிக்கிறேன். நட்புக்கு மரியாதை கொடுங்கள்” என தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Plz dont cast #nasser in role invisible in d total film. Unabl 2 ans calls sinc morn..respec frndship#Ko2 after effect.
— Kameela (@nasser_kameela)