ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ரஜினியின் வேண்டுகோள்!


ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ரஜினியின் வேண்டுகோள்!

வருகிற டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் வருகிறது. ஒவ்வொரு வருடமும் ரஜினிகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். எனவே இவ்வருடமும் தங்கள் தலைவரின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

அண்மையில் தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளை இழந்து உணவுக்காக ஏங்கித் தவிக்கின்றனர். மேலும் அரசு மற்றும் தன்னார்வலர்கள் தரும் நிவாரணப் பொருட்களாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தன் பிறந்தநாளை கொண்டாடுவது சரியாக இருக்காது என்பதால் தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தன் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினி.

மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.